search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பலி"

    • ராகுல் டி.நாயர் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயம் மாவட்டம் தீக்கோயி பகுதியை சேர்ந்தவர் ராகுல் டி.நாயர் (வயது 22). இவா் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18-ந்தேதி ராகுல் மாவேலிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஷவர்மா (இறைச்சி உணவு) ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

    மறுநாள் காலையில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • பாலக்கோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
    • சக்திவேல் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

     தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சக்திவேல் (வயது 21). இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அத்தையிடம் படத்திற்கு செல்வதாக கூறி வெளியில் சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் பாலக்கோடு தருமபுரி இடையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலை கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதி வாலிபர் பலியானார்.
    • செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (19). இவர் விருதுநகர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மகேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறி மகேந்திரன் கீழே விழுந்தார்.

    எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    ஆம்பூரை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 24) இவரது நண்பர்களான விக்னேஷ் (23) ராம்குமார் (28) ஆகியோர். வேலூரில் இருந்து கலைச்செல்வனை ஆம்பூரில் விடுவதற்காக ஒரே பைக்கில் சென்றனர்.

    வெட்டுவானம் அடுத்த சின்னகோவிந்தம்பாடி அருகே வாகனம் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் பின்பக்க சக்கரத்தில் கலைச்செல்வன் சிக்கினார்.

    பின் சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வன் இறந்தார்.

    தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் விக்னேஷ் மற்றும் ராம்குமார் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கலைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பள்ளிகொண்டா போலீசார் அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

    • வட மாநிலத்தை சேர்ந்தவர்
    • 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வெம்பாக்கம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது லத்திப் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அங்குள்ள பழைய கட்டிடத்தில் முகமது லத்திப் உட்பட வட மாநில தொழிலாளர்கள் 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திடீரென பழைய கட்டிடத்தின் சுவர் முகமது லத்திப்பின் தலையில் விழுந்தது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தூசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முகமது லத்திப் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் அப்பாவுபிள்ளை நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் ராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது போடியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 35).

    இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து தனது பைக்கில் பனப்பாக்கம் சென்றார்.

    ஓச்சேரி-அரக்கோணம் ரோடு நங்கமங்கலம் கிராம் அருகே வரும்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கவின் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார்.
    • குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோடு இந்திரா வீதியை சேர்ந்த முருகன் மகன் கவின் (வயது 22). இவர் கோவையில் பார்சல் சர்வீசில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கவின் தனது நண்பர்களுடன் பெருந்துறை-ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார். இவருக்கு நீச்சல் தெரியாது. அதனால் குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தேடி பார்த்தும் கவின் கிடைக்கவில்லை.

    மறுநாள் மீண்டும் தேடி பார்த்த போது கவின் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி அவரின் உடல் கரையில் ஒதுங்கி கிடந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார்.
    • சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கிராமசாவடி பகுதியில் ஐஸ் கடை மற்றும் பன் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது ஐஸ் கடையில் இளைய மகன் செல்லப்பாண்டி (வயது34) உடன் பணிபுரிந்து வந்துள்ளார். காலையிலிருந்து ஐஸ் வண்டிகள் வெளியே சென்று விற்பனையை முடித்துவிட்டு மீண்டும் இரவு ஐஸ் கம்பெனிக்கு வந்தடைந்து விடும். பின்னர் அதற்கு மின்சாரம் கொண்டு சார்ஜ் செய்வது தினசரி வாடிக்கையான ஒரு செயலாக இருந்து வருகிறது.

    அந்த ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார். சார்ஜ் செய்வதற்காக சுவிட்ச் ஆன் செய்துவிட்டு வந்தபோது வண்டியில் இருந்து மின்சாரம் எதிர்பாராத விதமாக செல்லப்பாண்டி மீது பாய்ந்தது.

    உடனே அவர் பயங்கர சத்தம் போட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அடுத்து அங்கு இருந்த மின்சார சுவிட்ச் அனைத்தையும் அணைத்து விட்டு பின்னர் செல்லப்பாண்டியை வந்து பார்த்துள்ளனர். அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனை அடுத்து அவர்கள் அருகே இருந்த ஆட்டோ மூலம் செல்லப்பாண்டியை உடனடியாக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லப்பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் புகழேந்தி (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட புகழேந்தி பலத்த காயத்துடன் கீழே விழுந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடோடி வந்து அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
    • உத்தமபாளையம் அருகே பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் மேகமலை ஹைவேவிஸ் எஸ்டேட் பேன்சா காலனியைச் சேர்ந்தவர் மந்திரி மகன் கவுதம் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான மனோஜ் (16), ராஜா (15) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    உத்தமபாளையம் அருகே புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்த ஷர்மா (22) என்பவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கவுதமின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×